ஊவா மாகாணத்தில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று முற்பகல் 11. 00 AM மணிக்கு முன்னதாகவே விடுமுறை வழங்கப்படும் என்று ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய, பசறை, பதுளை, லுணுகலை, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி - எல, வெளிமடை, மிகஹகிவுல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இந்தநிலையில், குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

0 Comments