பங்களாதேஷ் நாட்டின் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) தமது ஆட்சியை அமைக்கவுள்ளது.
குறித்த தேர்தலில் வெற்றியீட்டிய பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் இன்று (17) மாலை 4. 00 மணிக்கு தலைநகர் டாக்காவில் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.
பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments