தெலுங்கு நடிகர் விஜய் தேவர கொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் (National Crush) என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இன்று வியாழக்கிழமை (26) காலையில் திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்டுகின்றது.
நடிகர் விஜய்தேவரகொண்டா - ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரிலுள்ள நட்சத்திர ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற்றது.
விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் காலை 10.10 AM மணிக்கு பாரம்பரிய சடங்குகளின்படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக இடம் பெற்றது.
திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டுச் சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த தினங்களில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments