Ticker

10/recent/ticker-posts

இந்திய கிரிக்கெட் அணி வீரரின் தந்தை மரணம்.

 இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிங்கு சிங்கின் தந்தை காசந்திர சிங் இன்று (27) காலமானார்.

04 ஆம் நிலை கல்லீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானார்.

தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, தனது குடும்பத்தாருடன் இணைவதற்காக ICC T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் அங்கம் வகித்துள்ள ரிங்கு சிங் அணியிலிருந்து வெளியேறினார்.

தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவர் மீண்டும் இணைவாரா? என்பது இன்னும் உறுதியாகவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Post a Comment

0 Comments