Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை: ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றறு (27) 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 370,000 ரூபாவாக காணப்படுகிறது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 04 இலட்சம் ரூபாவாக தொடர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின்படி இலங்கையில் தங்க விலை மாற்றமின்றி தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சந்தையில் இன்றைய தினம் (27.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தினுடைய விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

அவ்வகையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உலக சந்தையில் 5,187 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் 5,158 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

குறித்த விலை மாற்றமானது இலங்கையிலும் தாக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்கனவே 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 04 இலட்சம் ரூபாவிலேயே நிலை கொண்டுள்ளது.

இவ்வாறான சூழலில் நகை வாங்க காத்திருப்போர் தமக்கான சாதகமான சூழலை நோக்கி எதிர்பார்த்திருக்கும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது 6,000 அமெரிக்க டொலர்களை இவ்வருடத்தில் தொடும் வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


Post a Comment

0 Comments