Ticker

10/recent/ticker-posts

எழுத்தாளர்களின் புதிய வெளியீடுகளை கொள்வனவு செய்ய திட்டம்

புதிய வெளியீடுகள் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் 2024, 2025, 2026 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட படைப்புகளை பெற்றுக் கொள்ளல் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபை அறிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட புத்தகங்களிற்கு ஆதரவை வழங்குவதற்கான இத்திட்டத்தின் கீழ், மேற்படி வருடங்களில் வெளியிடப்பட்ட நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற படைப்புகள், கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிப் படைப்புகள் போன்றவை 2026 மார்ச் 03 தொடக்கம் ஏப்ரல் 10 வரை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய விண்ணப்பங்களை தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினுடைய வெளியீடுகள் மற்றும் நூல் அபிவிருத்தி பிரிவிலிருந்தும், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments