ஈரானின் அதியுயர் தலைவர் Ali Khamenei, இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் மிகத் துல்லியமான வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக The Jerusalem Post செய்தி வெளியிட்டுள்ளது. சனிக்கிழமை இரவு டெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில், இடிபாடுகளுக்குள் இருந்து இவருடைய உடல் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை உத்தியோகபூர்வ பதிவினூடாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலிய வான்படை டெஹ்ரானிலுள்ள ஈரானிய தலைமையகத்தின் மீது ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலில் காமேனி தங்கியிருந்ததாகக் கூறப்படும் இரகசியக் கட்டிடம் முற்றாக தரைமட்டமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடைபெற்ற சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், இடிபாடுகளுக்குள் இருந்து 86 வயதான கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலியப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு முதல் ஈரானின் அதியுயர் தலைவராக இருந்த இவர், 37 ஆண்டுகளாக இப்பொறுப்பில் இருந்தார்.
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் நெட்டன் யாஹு தனது உரையில், “இச்சர்வாதிகாரி இப்போது இல்லாமல் போய் விட்டார் என்பதற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார். இதனை BBC மற்றும் Reuters ஆகியவை முக்கியச் செய்தியாக வெளியிட்டிருந்தன.
Ali Khamenei 1981 முதல் 1989 வரை ஈரானின் அதிபராகவும், பின்னர் 1989 முதல் அதியுயர் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

0 Comments