இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதியுச்ச தலைவரின் மகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஊடகமொன்று குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் ஈரானின் அதியுச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போரில் காமேனியும் கொல்லப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஈரானிய அதிகாரிகள் இத்தகைய தகவல்களை உளவியல் போர் என்று கூறி மறுப்பு வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments