ஈரானில் அண்மையில் உருவாகியுள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து, புதிய உச்ச தலைவர் காமேனியின் முதல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிராந்தியத்தில் உள்ள அணைத்து அமெரிக்க தளங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும், இல்லையெனில் அதன் மீது தாக்குதல் நடத்தப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஈரான் அதன் அணு ஆயுதங்களின் நிலைவரையை பேணுவதுடன், அவற்றை அவர்களின் மண்ணில் உள்ள அமெரிக்க தளங்களை மட்டுமே குறிவைத்து பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், தெஹ்ரானின் எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஹார்முஸ் நீரிணை மூடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் முதல், தாக்குதல்களில் கொல்லப்பட்ட குழந்தைகள் வரை உயிரிழந்த ஈரானியர்களுக்காக பழிவாங்கும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து செயற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானியர்களிடையே ஒற்றுமை மற்றும் விசுவாசத்தை காக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments