எரிபொருளுக்கான QR குறியீடுகளை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 14, 2026 இற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் QR குறியீட்டைப் மீளப்பெறும்போது அப்பதிவை மேற்கொண்ட தொலைபேசி எண் தற்போது பயன்பாட்டில் இல்லாமை அல்லது வேறு ஒருவர் அதனைப் பயன்படுத்துவதால் மக்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்களை தவிர்க்கும் வகையிலேயே இப்புதிய அம்சம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உங்களுடைய வாகனமானது, வேறொரு இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்களிடமுள்ள சரியான தகவல்களை உள்ளிடுவதன் மூலமாக தற்போதுள்ள பதிவை இரத்துச் செய்து, புதிய தொலைபேசி இலக்கத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும்.
இதற்கு வாகன இலக்கம் மற்றும் சேஸி இலக்கம் முக்கியமாகும்.
Override எனும் தெரிவை தெரிந்தெடுக்கும்போது அந்த வாகனத்தின் பழைய கணக்கு தரவுத்தளத்திலிருந்து நீக்கப்பட்டு உங்கள் தகவல்களுடனான புதிய கணக்கு உடனடியாகச் செயற்படுத்தப்படும்.
இதனால் பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி இலக்கங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்கள், தடையின்றி QR குறியீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments