Ticker

10/recent/ticker-posts

சரணடைந்ததா ஈரான்? டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 


அவர் இன்று மேலும் கூறியுள்ளதாவது,

தொடர் தாக்குதலுக்குள்ளாகி வரும் ஈரான், மன்னிப்பு கேட்டு, அதனுடைய மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது.

மேலும் இனிமேல் அவர்கள் மீது தாக்கமாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளது. இந்த வாக்குறுதியானது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இடைவிடாத தாக்குதலின் காரணமாக மட்டுமே வழங்கப்பட்டது. 

அவர்கள் மத்திய கிழக்கைக் கைப்பற்றி ஆட்சி செய்வதற்கு முயன்றனர். 

ஆயிரக்கணக்கான வருடங்களில், சுற்றியுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் தோற்றது இதுவே முதல் முறையாகும். 

அவர்கள், 'நன்றி ஜனாதிபதி டிரம்ப்' என்று தெரிவித்துள்ளனர். அதற்கு 'உங்களை வரவேற்கிறோம்!' என்று நான் கூறியுள்ளேன், ஈரான் இனிமேல் 'மத்திய கிழக்கின் கொடுமைக்காரன்' அல்ல. 

மாறாக, அவர்கள், மத்திய கிழக்கின் தோல்வியுற்றவர்கள்' என்று அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


அண்டை நாடுகளிடம் மன்னிப்பை கோரினார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் மீதான தாக்குதலை அங்கிருந்து தொடங்காவிட்டால், ஈரானை அண்டிய நாடுகளை இனி ஈரான் குறிவைக்க மாட்டாது என்று ஈரானின் ஜனாதிபதி அறிவித்துள்ளதுடன், கடந்த நாட்களில் நடந்த தாக்குதல்களுக்காக அண்டை நாடுகளிடம் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பும் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments