Ticker

10/recent/ticker-posts

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (13) மாலை 4:00 PM மணி முதல் நாளை (14) மாலை 4:00 PM மணி வரை அமுலில் இருக்குமென்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டம்: யட்டிநுவர

கேகாலை மாவட்டம்: வரகாபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை, 

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ, 

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Post a Comment

0 Comments