ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பது மிகவும் கடினமான வேலை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்ம்ப் தெரிவித்துள்ளார்.
ஒபரெஷன் மிட் நைட் ஹேமர் என்பது ஈரானிலுள்ள யுரேனிய தளங்களை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கு மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகும். அதை அங்கிருந்து தோண்டியெடுப்பது நீண்டதும் மற்றும் கடினமான வேலையாக இருக்கும்” என்று டொனால்ட் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் காரணம் காட்டியே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெப்ரவரி 28 முதல் போர் தாக்குதல்களைத் தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது நடைபெற்ற போரில் யுரேனியம் செறிவூட்டல் ஆலை உட்பட ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments