நான் ஒரு போரில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரையில் நாம் விலகிக் கொள்ளாத ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் ஈரான் முற்றிலுமாக அழிந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக அவர்கள் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டொலர்களை இழக்கின்றனர். ஈரானுடன் நாம் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தம் முந்தைய ஜனாதிபதிகள் செய்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைவிடவும் பல மடங்கு சிறந்ததாக இருக்கும்.
நான் ஒரு போரில் மிகப்பெரியளவில் வெற்றி பெற்று வருகிறேன். ஆனால், சிலர் போலியான செய்திகளை வெளியிடுகின்றனர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments