Ticker

10/recent/ticker-posts

IPL தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே இம்முறை நடைபெறும் IPL சீசனில் இனி விளையாடமாட்டார் என்று CSK அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது இடது தொடை தசையில் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ஆயுஷ் மாத்ரே IPL 2026 தொடரிலிருந்து விலகியுள்ளார்'. இக்காயத்திலிருந்து அவர் குணமடைய 06 முதல் 12 வாரங்கள் ஆகும். 

ஆயுஷ் குறித்த தொடரில் 02 அரைசதங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த செய்தியானது CSK அணி இரசிகர்களுக்கு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments