பஹ்ரைன், சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்தான் ஆகிய 05 நாடுகளும் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று ஈரான் கோரியுள்ளன.
இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜமால் பரேஸ் ஆல்ரோவெயி ஆகியோருக்கு ஈரானின் தூதுவர் மற்றும் நிரந்தர பிரதிநிதி அமீர்-சையது இரவானி கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அவர்களுடைய சர்வதேச ரீதியான தவறான செயல்களின் விளைவால் ஏற்பட்ட, ஈரானிலுள்ள அனைத்து பகுதிகளின் பாதிப்புகள் மற்றும் உணர்வுபூர்வ பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்குவது உட்பட ஈரானுக்கு முழு அளவிலான நஷ்ட ஈட்டை குறித்த 05 நாடுகளும் வழங்க வேண்டும் என்றும் இரவானி வலியுறுத்தியுள்ளார்.

0 Comments