கொழும்பு பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் நடாத்தப்படுகின்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான கவிதைப் போட்டி இதுவாகும்.
அரச அல்லது தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் எந்தவொரு மாணவன் / மாணவியும் இதற்கான ஆக்கங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
பெயர், முகவரி, வயது, பல்கலைக்கழகத்தின் பெயர். தனிப்பட்ட தொலைபேசி இலக்கம், Email முகவரி மற்றும் ஆக்கத்தின் பெயர் என்பவற்றை உள்ளடக்கி மாணவன் /மாணவியினுடைய கையொப்பமிடப்பட்ட ஒரு விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.
மேலும், குறிப்பிட்ட ஆக்கமானது குறித்த பல்கலைக்கழக மாணவன / மாணவியினுடையது என்பதை உறுதிப்படுத்துவதற்கு துறைத் தலைவர் (Head of the Department) அல்லது பீடாதிபதியின் கையொப்பம் மற்றும் பதவி முத்திரை என்பவற்றுடன் சான்றுப்படுத்தி அனுப்ப வேண்டும்.
ஒரு போட்டியாளரினால் ஒரு துறையின் கீழ் ஒரு ஆக்கத்தினை மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
தெளிவான எழுத்துக்களால் எழுதியோ அல்லது தட்டச்சு (Type) செய்தோ குறித்த ஆக்கத்தினை அனுப்ப முடியும்.
வெற்றிபெறும் ஆக்கத்திற்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படும். அத்தோடு தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்களை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
alumniUOC யூடியுப் செனலினைப் பார்வையிடுவதன் மூலமாக ஆக்கப்படைப்புக்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
நடுவர் குழுவின் தீர்மானமே இறுதியானதாகும்.
உங்கள் ஆக்கத்தின் 03 பிரதிகளை 2026 ஜூன் 20 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்குமாறு கடிதத்தின் இடது பக்க மேல் முலையில் "பல்கலைக்கழகப் பிரிவு" எனக் குறிப்பிட்டு பின்வரும் முகவரிக்கு பதிவுத் தபாவில் அனுப்ப வேண்டும்.
கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் அமைப்பு,
சிரேஸ்ட மாணவர் ஆலோசகர் அலுவலகம், கொழும்பு பல்கலைக்கழகம்,
கொழும்பு 03.
மேலும், விண்ணப்பப் படிவம் மற்றும் குறித்த ஆக்கத்தின் PDF பிரதி என்பவற்றை nocalumniorg@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மேலதிக விபரங்களுக்கு:
ரஞ்சித் விஜேநாயக்க 0778618273
பேர்னாட் காரியவசம் 0714407230
www.uocalumni.com

0 Comments