சீரற்ற வானிலையால் நாட்டின் 08 மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக பதிவான மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (14) காலை 6:00 AM மணிக்கு வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 08 மாவட்டங்களைச் சேர்ந்த 35 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
02 இடைத்தங்கல் முகாம்களில் 104 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 88 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments