Ticker

10/recent/ticker-posts

சீரற்ற காலநிலையால் சில அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

 நிலவி வரும் சீரற்ற காலநிலையால், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (மே 15) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இவ்விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக மலையகப் பகுதிகளில் பெய்து வருகின்ற கடும் மழை மற்றும் மழையுடனான வானிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயங்கள் குறித்தும் அவதானமாக இருக்குமாறும் கல்வி அதிகாரிகள் & பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments