Ticker

10/recent/ticker-posts

நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்கும் திகதி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான விஜய் எதிர்வரும் மே 07 ஆம் திகதி தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்பதவியேற்பு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே தினத்தில் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் TVK 108 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, சட்டமன்ற குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 07 ஆம் திகதி நடைபெறவுள்ள இப்பிரம்மாண்ட பதவியேற்பு விழாவுக்கு, பல்வேறு மாநிலங்களின் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இவ்விழாவுக்கான பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments