Ticker

10/recent/ticker-posts

TVK ஆட்சியமைக்க 04 வழிகளே உள்ளன.

 தமிழக சட்டமன்ற தேர்தலில் TVK 108 இடங்களிலும் DMK 73 இடங்களிலும் ADMK 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் TVK ஆட்சியமைக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது . அவ்வகையில் TVK இற்கு 4 வழிகள் உள்ளன.

01 வது TVK வுக்கு காங்கிரஸ் (5 தொகுதிகள்), பா.ம.க. (5), இந்திய கம்யூனிஸ்டு அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அல்லது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒன்று (2) ஆதரவு அளிக்க வேண்டும்.

02 வது வழியாக, TVK வுக்கு பா.ம.க. (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1) ஆதரவளிக்க வேண்டும்.

03 வது வழியாக, TVK வுக்கு காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1) ஆதரவளிக்க வேண்டும்.

04 வது வழியாக, TVK வுக்கு ADMK (45) ஆதரவு அளிக்க வேண்டும். ஆனால், ADMK ஆதரவளிக்க வேண்டுமென்றால், துணை முதலமைச்சர், முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளை குறிவைக்கும். இவ்வாறு 04 வழிகள் இருந்தாலும், TVK தலைவர் விஜய் எடுக்கப்போவது தான் இறுதி முடிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments