தமிழக சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க TVK இற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று TVK தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 05 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 06 பேரின் ஆதரவு தேவைப்பட்டது.
ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் TVK தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்நிலையில் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் IUML கட்சிகளிடம் TVK ஆதரவு கேட்டிருந்தது.
இதனையடுத்து இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை TVK ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தவெகவின் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், TVK ஆட்சியமைக்க மேலும் 02 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை எழுந்தது. விசிக தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கும் என்று தெரிகின்றது.
இச்சூழலில், IUML கட்சியும் TVK வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. IUML சார்பாக வாணியம்பாடியில் போட்டியிட்ட சையது ஃபரூக் பாஷா மற்றும் பாபநாசத்தில் போட்டியிட்ட ஷாஜஹான் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.
இதன்மூலம் தற்போது TVK பெரும்பான்மைக்குத் தேவையான 118-ஐ எட்டியது. விசிக ஆதரவளித்தால் அந்த எண்ணிக்கை 120 ஆக உயரும்.

0 Comments