TVK தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கில் நடிகை த்ரிஷா போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 8. 00 AM மணி முதல், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், பிற்பகல் 1.20 PM மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளிலும், ADMK 57 தொகுதிகளிலும், DMK 49 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
மேலும், திருச்சி கிழக்கில் 29,884 வாக்குகள் பெற்று, 12,173 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால், தான் போட்டியிட்ட 02 தொகுதிகளிலும் விஜய் வெல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
02 தொகுதியில் வென்றால் ஏதாவது ஒரு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்ய வேண்டும்.
இந்நிலையில், விஜய் திருச்சி கிழக்கில் இராஜிநாமா செய்வார் என்றும் அந்த தொகுதியில் மீண்டும் நடைபெறும் இடைத் தேர்தலில் TVK சார்பாக நடிகை த்ரிஷா போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments