Ticker

10/recent/ticker-posts

பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 24 இலவச பாடநெறிகளுக்கான விண்ணப்பம் கோரல்

இலங்கையின் கல்வி முறையில், எந்தவொரு பாடத்துறையிலும் GCE (A/L) சித்தியடைந்த அல்லது NVQ (Level 4) பூர்த்தி செய்த மாணவர்கள், தங்களுடைய தொழிற்துறைத் திறன்களையும் தகைமைகளையும் வளர்த்துக் கொண்டு நேரடியாக வேலைவாய்ப்புச் சந்தைக்குள் நுழைவதற்கும், பட்டப்படிப்பு மட்டம் வரை கல்வியைத் தொடர்வதற்கும் அல்லது இந்த இரண்டு வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்வதற்கும் வழிவகுக்கும் கல்விப் பாதையாக பல்கலைக்கழகக் கல்லூரிகள் விளங்குகின்றன.



பல்கலைக்கழகக் கல்லூரிகள் மூலமாக தேசிய தொழிற்தகைமைகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு NVQ 06 சான்றிதழும், பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் உயர் தேசிய டிப்ளோமா (HND) சான்றிதழும் இதில் வழங்கப்படும். இத்தொழிற்கல்வியைப் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. அவர்கள் நேரடியாக வேலைவாய்ப்பிற்குச் செல்லலாம் அல்லது தேவைப்பட்டால் பட்டப்படிப்பு (BTech) வரை தங்களுடைய கல்வியைத் தொடர்வதற்காக, இலவசக் கல்வி முறையின் கீழ் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்துடனும் (University of Vocational Technology ) இணைய முடியும்.

இரத்மலானை தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்துடன் (UoVT) இணைந்ததாக 06 பல்கலைக்கழகக் கல்லூரிகள் படகங்கல (அவிசாவளைக்கு அருகில்), இரத்மலானை, குளியாப்பிட்டிய, அநுராதபுரம், மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகக் கல்லூரிகளில் கல்வி இலவசமாக வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்படும். பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பிரதானமாக தொழிநுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பாடத்துறைகளின் கீழ் 24 பாடநெறிகள் நடத்தப்படுகின்றன.

அவையாவன:

1.Aquaculture & Aquatic Resource Management (நீரியல் வளர்ப்பு மற்றும் நீர்வாழ் வள முகாமைத்துவம்)

2.Automobile Technology (மோட்டார் வாகன தொழிநுட்பம்)

3.Building Services Technology (கட்டிடச் சேவைகள் தொழில்நுட்பம்)

4.Construction Technology (கட்டுமானத் தொழில்நுட்பம்)

5.Cosmetology (அழகுக்கலைத் தொழில்நுட்பம்)

6.Drafting Technology (வரைபட வடிவமைப்புத் தொழில்நுட்பம்

7.Electrical Technology மின்சாரத் தொழில்நுட்பம்)

8.Electronic Technology (மின்னணுவியல் தொழில்நுட்பம்)

9.Farm Machinery Technology (பண்ணை இயந்திரத் தொழில்நுட்பம்)

10.Fashion Design Technology (ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பம்)

11.Food Technology (உணவுத் தொழில்நுட்பம்)

12.Mechatronics Technology (மெகாட்ரானிக்ஸ்)

13.Post-harvest Technology (அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம்)

14.Production Technology (உற்பத்தித் தொழில்நுட்பம்)

15.Quantity Surveying (அளவையியல்)

16.Refrigeration & Air Conditioning Technology (குளிரூட்டல் மற்றும் குளிர்சாதனத் தொழில்நுட்பம்)

17.Telecommunication Technology (தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம்)

18.Television Post Production Technology (தொலைக்காட்சிப் பின்-தயாரிப்புத் தொழில்நுட்பம்)

19.Television Program Production Technology (தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் தொழில்நுட்பம்)

20.Event Management (நிகழ்வு முகாமைத்துவம்)

21.Travel & Tour Management (சுற்றுலா மற்றும் பயண முகாமைத்துவம்)

22.Hospitality Management (விருந்தோம்பல் முகாமைத்துவம்)

23.Maritime & Logistics Management (கடல்சார் மற்றும் தளவாட முகாமைத்துவம்)

24.Information & Communication Technology (தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பம்)

ஆகிய பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன..

மேற்குறிப்பிட்ட 06 பல்கலைக்கழகக் கல்லூரிகளின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்ப்புக்காக 2026 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 21 வரை விண்ணப்பிக்க முடியும். 

வேகமாக மாறிவரும் உலகின் எதிர்காலத் தேவைகளையும் சவால்களையும் வெல்லக்கூடிய, நடைமுறைத் திறன்கள், புதுமையான சிந்தனைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான திறமைகள் கொண்ட தொழில் வல்லுநர்களை உருவாக்க இப்பயிற்சிகள் உறுதுணையாக இருக்கும்.

விண்ணப்ப முடிவு திகதி 21.08.2026 ஆகும்.


Post a Comment

0 Comments