2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள GCE (O/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத மாணவர்கள், தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய NIC இலக்கத்தை பயன்படுத்தி பரீட்சைக்குப் பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டல் சுற்றறிக்கை அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.

0 Comments