2026 ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை http://nstt.moe.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை (Printed copy) 2026 ஜூலை 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாங்கள் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும் என்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், ஆசிரியர்களால் தனிப்பட்ட முறையில் கொண்டுவரப்படும் அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To join with whatsapp :
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x

0 Comments