அமெரிக்காவின் அட்லாண்டா ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியின் கோல் காப்பாளர் ஜோர்டான் பிக்போர்ட், ஆர்ஜென்டினா வீரர்களை எதிர்கொள்வதற்கு இரகசியக் குறிப்புகளைத் தனது தண்ணீர் போத்தலில் எழுதி வைத்துள்ளார்.
அவர் இச்சுவாரசியமான இரகசிய உத்தியைக் கையாண்டது போட்டிக்குப் பின்னர் தெரிய வந்துள்ளது.
இப்போட்டி ஒருவேளை பெனால்டி ஷூட் - அவுட் முறைக்குச் சென்றால் ஆர்ஜென்டினா வீரர்கள் எந்தெந்தப் பக்கங்களில் பந்தை அடிப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணித்துள்ள நிலையிலேயே குறித்த உத்தியைக் கையாண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போட்டி முடிந்த பின்னர் அவர் குறித்த தண்ணீர் போத்தலை மைதானத்திலேயே விட்டுச் சென்றதால், லியோனல் மெஸ்ஸி உள்ளிட்ட ஆர்ஜென்டினா வீரர்கள் குறித்த இரகசியக் குறிப்புகளைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இருப்பினும், போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி 1-0 என்ற முன்னிலையில் இருந்தது. ஆனால், போட்டியின் கடைசி 05 நிமிடங்கள் மற்றும் கூடுதல் நேர இடைவெளியில் ஆர்ஜென்டினா அடுத்தடுத்து 02 கோல்களை அடித்து அதிரடி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments