Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

GCE (A/L) பரீட்சைகளை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாமா? என்பது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிப்பதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று (16) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மனுதாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Post a Comment

0 Comments