விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றி விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் 03 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமான கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 04 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவரை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments