Ticker

6/recent/ticker-posts

கிரிக்கெட் இரசிகர்களுக்காக புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்

 இலங்கை கிரிக்கெட் (Sri Lanka Cricket) சபையானது ‘Sri Lanka Cricket Live ’ என்ற பெயரில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் கையடக்க தொலைபேசிக்கான செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.


குறித்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி, போட்டி அட்டவணைகள், முடிவுகள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் தொடர்புடைய குழாம் சார்ந்த அறிவிப்புகள், செய்திகள் போன்றவற்றை இரசிகர்கள் பார்வையிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் அப்பிள் ஸ்டோர் போன்றவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மேலும், குறித்த செயலியை QR குறியீடு மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அல்லது https://srilankacricket.lk/mobile-app என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments