Ticker

6/recent/ticker-posts

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்துக்கு புதிய தலைவர் நியமனம்.

 இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் "இஸ்ரோ" (ISRO) பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயற்படுகின்றது.


இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் என்பவர் பதவியில் உள்ளார். இவருடைய பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து, புதிய தலைவராக வி. நாராயணன் என்பவரை இந்திய மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.



தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன் எதிர்வரும் 14 ஆம் திகதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் என்பதுடன், தற்போது வி. நாராயணன் இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக பணியாற்றுகிறார். இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.




TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments