Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்திலும் கடவுச்சீட்டு அலுவலகம்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகமொன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் கடந்த செவ்வாய்க்கிழமை (07) சபையில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

கொழும்பு மற்றும், வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் கடவுச்சீட்டு அலுவலகம் காணப்படுகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்திற்கென தனியாக ஒரு அலுவலகம் கிடையாது என்பதை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்று இல்லாமையினால், அங்குள்ள மக்கள் இரண்டு மூன்று தினங்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

உல்லாசப்பிரயாணிகள் அதிகமாக வருகை தரும் கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

TO JOIN WITH US:

https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments