ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கும் 25 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு குறிப்பிட்டளவு ஊக்கத் தொகை வழங்கவுள்ளதாக ரஷ்யா அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்துவதற்காக ரஷ்யா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவில் கரேலியா மாகாணத்தில் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் முழு நேரப் படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவிகள் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தால், அவர்களுக்கு 100,000 ரஷியன் ரூபிள் ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றது.
இப்புதிய சட்ட விதிமுறை படி, இறந்த நிலையில் குழந்தையைப் பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு இத்தொகை கிடைக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவால் குழந்தை இறக்கும் பட்சத்தில் தொகை திரும்பப் பெறப்படுமா? என்பவை உள்ளிட்ட தகவல்கள் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.
மேலும், விஷேட தேவையுடைய குழந்தையைப் பெற்றெடுக்கும் நபர்களுக்கு இவ்விதிமுறை பொருந்துமா? என்பனவற்றையும் குறித்த சட்ட விதிமுறைகள் தெளிவுபடுத்தவில்லை.
கரேலியா மாகாணத்தைப் போலவே ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக இது போன்ற திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவில் 11 பிராந்திய மாகாணங்கள், குழந்தை பெற்றெடுக்கும் மாணவிகளுக்கு நிதிச் சலுகைகளை வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments