நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 தொடக்கம் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
விடைத்தாள் மதிப்பீடு 64 மையங்களில் புதன்கிழமை (08) தொடங்கியது என்று அவர் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது.
சிங்கள மொழி மூலம் 244,092 பேரும், தமிழ் மொழி மூலம் 79,787 பேரும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments