Ticker

6/recent/ticker-posts

சீனாவில் பரவியுள்ள புதிய வைரஸ்: இலங்கையின் நிலைப்பாடு என்ன?

சமீபத்திய நாட்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், சில சந்தர்ப்பங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ் நிலையாக இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என்று வைரஸ் நோய் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர் ஜூட் ஜயமஹா என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் ஜூட் ஜயமஹா என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஜூட் ஜயமஹா குறித்த வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறிகளையும் விளக்கினார்.

“பொதுவாக இருமல், சளி, இலேசான காய்ச்சல் ஆகியவையே இதன் அறிகுறிகளாகும், மேலும், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இது நிமோனியாவாகவும் மாறலாம்.

ஆனால், இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது மற்றும் அனைவருக்கும் நிகழாது. குறித்த வைரஸால் உயிரிழப்பதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாகும். சில நாட்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சிபைகளுக்கு பின்னர் பெரும்பாலான மக்கள் குணமடைகின்றனர். எனவே இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய தேவை இல்லை" என்றும் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments