Ticker

10/recent/ticker-posts

16 வயது மாணவனுடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற, குழந்தைகள் நலத்துறை அமைச்சரான பெண்.

16 வயது மாணவருடன் உறவு வைத்துக்கொண்டதாக கூறிய ஐஸ்லாந்து பெண் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.

இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் 58 வயதான ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது தனது 22 வயதில் 16 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தை பெற்றதாக கூறினார்.

அமைச்சர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் அவரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


TO JOIN WITH US:

Post a Comment

0 Comments