அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச் சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் நேற்று வெள்ளிக்கிழமை (21) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தனது 76 வயதில் காலமான இவர் 02 முறை ஹெவிவெய்ட் சாம்பியனும், உலகின் மிகவும் வயதான ஹெவிவெயிட் உலக சாம்பியனாகவும் இருந்துள்ளார்.
குத்துச்சண்டை வளையத்தில் 'பிக் ஜார்ஜ்' (Bug George) என்று அழைக்கப்படும் இவர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தனது முதல் சாம்பியன்ஷிப்பை வென்ற 21 ஆண்டுகளுக்குப் பிறகு 02 வது சாம்பியன்ஷிப்பையும் வென்றுள்ளார்.
ஃபோர்மேன் குத்துச்சண்டை வாழ்க்கையில் 81 சண்டைகளில் 76 சண்டைகளில் வென்று அப்போட்டிகளில் 68 'நோக் அவுட்' வெற்றிகள் பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments