Ticker

6/recent/ticker-posts

கிண்ணியாவில் சாதனை மாணவிக்கு பராட்டு விழா

GCE (A/L) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற கிண்ணியா அல்-இரர்பான் மகா வித்தியாலய மாணவிக்கு இன்று (14) பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், SDEC, OBA, பள்ளிவாயல்கள், சமூகத்தினர் இணைந்து கௌரவிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் குறித்த மாணவியின் பெற்றோரும், மாணவிக்கு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ நகரசபை உறுப்பினர் அன்வர் (மௌலவி), பைசல் நகர் நூறாணியா ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் பாரூக், நபவி பள்ளிவாயல் தலைவர் சதக்கதுல்லா, SDEC சார்பாக திரு. புர்க்கான், OBA சார்பாக ரசாட் ஆகியோர்கள் கலந்து கொண்டு குறித்த மாணவிக்கு பரிசில்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



Post a Comment

0 Comments