சிரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் ரியாதில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில், டொனால்ட் ட்ரம்ப் பேசியதாவது:
"தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சிரியா பின்னடைவைச் சந்திப்பதற்கு அவை முக்கிய பங்காற்றின. ஆனால், இப்போது சிரியா முன்னேற வேண்டுமென்பதால் அத்தடைகளை நீக்க உத்தரவிடுகின்றேன். சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷராவின் நிர்வாகத்திற்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
தற்போது சிரியாவிற்கு முன்னேறுவதற்கான நேரம் வந்து விட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும்". என்றும் ட்ரம்ப் பேசினார்.
இதே வேளை சிரியா மீதான தடைகளை நீக்குவதற்கு சவுதி அரேபியாவின் இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொருளாதார தடையை ட்ரம்ப் நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments