தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அளுத்கோட தச்சு பாடசாலைக்கு அருகிலுள்ள வாடகை வீடொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த ஒருவர் 19,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (08) இடம் பெற்றுள்ளது.
குறித்த வீட்டார் தமது 02 குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த தினத்தில் இரவு உணவை உண்டதன் பின்னர் இரவு 11.00 PM மணியளவில் தாய் படுக்கைக்குச் சென்றுள்ளார்.
மறுநாள் அதிகாலை இளைய மகனுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டதையடுத்து, தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத ஒருவர் கையில் இரண்டு கறுப்பு நிற பைகளுடன் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு சிறுவன் அலறியுள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் உடனடியாக வந்த பெற்றோர் வீடு முழுவதும் அந்த நபரை தேடிப் பார்த்துள்ளனர். எனினும், குறித்த மர்ம நபரை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
பின்னர் வீட்டை சோதனையிட்டு பார்த்த போது படுக்கையறைக்கு அடுத்த அலமாரியில் துணிகள் கலைந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அதிலிருந்த 19,000 ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, திருட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments