Ticker

10/recent/ticker-posts

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

 தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையில் ஆசிரியர் இடமாற்ற முறையை ஏற்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து இரத்தினபுரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர்குறித்த கருத்துக்களை வெளிட்டுள்ளார்.

ஆசிரியர் பற்றாக்குறை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கல்விச் செயல்பாட்டில் ஆசிரியர்கள் ஒரு தீர்க்கமான காரணியாக உள்ளனரென்றும், அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு பொருத்தமான ஆசிரியர் பகிர்வை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் ஹரிணி மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.


Post a Comment

0 Comments