இந்தியா உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி என்று கூறி, ஊழியர் ஒருவர் மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்த அப்பெண்ணை குறித்த ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments