நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்களில் 7395 குடும்பங்களைச் சேர்ந்த 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரான பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியின் காரணமாக நில்வள கங்கை, கிங் கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டங்கள் உயர் மட்டத்தில் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Comments