Ticker

10/recent/ticker-posts

இலங்கை - இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்.

இந்திய நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் - இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (Sunday 26) இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இக்கப்பலில் நாள் தோறும் இலங்கையிலிருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டவர் என்று ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நாகை - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால், கப்பலில் செல்வதற்கு இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments