கண்டி – அல்-ஹக்கானிய்யா அரபுக் கல்லூரியில் 'நன்றி நவிலும் சிறப்பு நாள் – 2025' என்ற தலைப்பில் விசேட பிரம்மாண்டமான நிகழ்வு 2025 அக்டோபர் 26 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரிக்கு பல்வேறு வகைகளில் பங்களிப்பு செய்தோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. பழைய மாணவர் சங்கம், பெற்றார் ஒன்றியம், கல்லூரி உஸ்தாத்மார் சங்கம், கல்லூரியின் நிர்வாக சபை ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் எம். எச். எம். லபீர் (முர்ஸி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு அதிதியாக யூசுப் ஹனீபா (முப்தி) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து 1000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கல்லூரியில் 20 ஆண்டுகள் பணியாற்றிய உஸ்தாத்மார்களுக்கு சிறப்புக் கௌரவங்களும், மேலும் பங்கேற்ற விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




0 Comments