Ticker

10/recent/ticker-posts

மெக்சிகோ வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 மெக்சிகோ நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் ஏராளமான முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.



பெரும்பாலான, மலைப் பகுதிகளின் பாதைகள் மண்சரிவில் முழுமையாக முடங்கியுள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்பது கடும் சவாலானதாகவும் மாறியுள்ளது.



இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியவற்றின் பாதிப்புகளில் இதுவரை 76 பேர் பலியானதாகவும், 27 பேர் மாயமானதாகவும், மெக்சிகோ அரசாங்கம் நேற்று (ஒக். 20) அறிவித்துள்ளது.



இதுபற்றி, செய்தியாளர்களுடன் பேசிய மெக்சிகோவின் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதுடன், இணைப்பு வழிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 01 இலட்சம் குடும்பங்களுக்கு 10 பில்லியன் பெசோஸ் (இந்திய மதிப்பில் ரூ.4.8 ஆயிரம் கோடி) நிவாரண நிதியை அளிப்பதாகவும், ஜனாதிபதி ஷீன்பாம் என்பவர் அறிவித்துள்ளார்.



இப்பேரிடரில், அதிகம் பாதிக்கப்பட்ட ஹிடால்கோ மற்றும் வெராக்ரூஸ் ஆகிய மாநிலங்களில், மெக்சிகோ பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 12,700 வீரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும் 

Post a Comment

0 Comments