Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (22)  322,000 ரூபாயாக குறைந்துள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் (21) 370,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினத்தில் (22) 350,000 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த தங்கத்தின் விலையானது தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments