இங்கிலாந்தில் கறிக்கோழிகள் கொண்டு சென்ற லொறி ஒன்று இம்மாதத்தின் தொடக்கத்தில் தீ விபத்துக்குள்ளாகியது.
அதனை தொடர்ந்து, தீயில் கருகி உயிரிழந்த கோழிகளுக்கு நினைவுப் பலகை ஒன்று அமைப்பதற்கு குறித்த அமைப்பு அரசிடம் அனுமதி கோரியது. இங்கிலாந்தில் Kelvedon என்ற இடத்தில் கறிக்கோழிகள் கொண்டு சென்ற லொறி ஒன்று கடந்த 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி தீ விபத்துக்கு உள்ளாகியதில் நூற்றுக்கணக்கான கோழிகள் எரிந்து சாம்பலாகின.உயிரிழந்த கோழிகளின் நினைவாக விபத்து நிகழ்ந்த இடத்தில் நினைவுப் பலகை ஒன்றை அமைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான PETA அமைப்பு நெடுஞ்சாலைத்துறையிடம் கோரியிருந்தது.
ஆனால், நினைவுப் பலகை அமைப்பதற்கு அனுமதியளிக்க நெடுஞ்சாலைத்துறை மறுத்து விட்டது. அவ்வாறு சாலையோரம் நினைவுப்பலகைகள் அமைப்பது வாகன சாரதிகளின் கவனத்தை திசை திருப்பக் கூடும் என்றும், அந்த நினைவிடத்தைப் பார்வையிட வருவோருக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறியுள்ள நெடுஞ்சாலைத்துறை குறித்த நினைவுப் பலகையை அமைக்க அனுமதியளிக்க மறுத்து விட்டமை குறிப்பிடத்தக்காதகும்.

0 Comments