அரசகரும மொழிகள் திணைக்களத்தில் நவம்பர் 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த மொழிபெயர்ப்பாளர் (சிங்களம் / ஆங்கிலம்), (சிங்களம் / தமிழ்), (தமிழ் / ஆங்கிலம்) தரம் II பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற அசாதரண காலநிலை காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பரீட்சை நடைபெறும் திகதி பற்றி பரீட்சாத்திகளுக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென்று அரசகரும மொழிகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

0 Comments