இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவுக்கு அருகில் இந்தியப் பெருங்கடலில் இன்று (27) 10.26 AM மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இக்கட்டத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளுக்கு அண்மையில் வசிக்கும் மக்கள் இது தொடர்பான எதிர்கால அறிவிப்புகளுக்கு கவனமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தகவல்கள் கிடைக்கும்போது சமீபத்திய புதுப்பிப்புகள் ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://chat.whatsapp.com/LeAOj9lS2f5IfLd0mtwReT?mode=hqrt1

0 Comments